மீண்டும் அதே நடிகருடன் இணையும் சாய் பல்லவி!

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலமாக திரையுலக ரசிகர்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. இவர் இதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகியாக திகழ்ந்து வந்தார். மேலும் இவர் தெலுங்கில் நானி நடித்து வெளிவந்த MCA படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் நல்ல ரீச் கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் நடிகர் நானியுடன் சாய் பல்லவி நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.